Icon to view photos in full screen

"எங்கள் ஆர்வத்தைத் தொடர நாங்கள் இப்போது ஊதியம் பெறவும் தொடங்கியுள்ளோம்"

டெல்லியைச் சேர்ந்த ஷைசவ் சிங்கால் (26) தனது டிஜிட்டல் கேமரா இல்லாமல் பார்ப்பது அரிது. "அது அவரின் ஒரு அங்கமாக மாறிவிட்டது" என்று அவரது சகோதரி ஸ்ரேயா கூறுகிறார். அவர் ஒரு இளைஞனாக புகைப்படம் எடுத்தலில் ஆர்வம் கொண்டார். அவர் எங்கு சென்றாலும் தனது புகைப்பட உபகரணங்களை தன்னுடன் எடுத்துச் செல்லத் தொடங்கினார். காய்கறிகள் வாங்க தனது தாயுடன் சந்தைக்கு சென்றாலோ அல்லது சமூக விழாக்களுக்கு சென்றாலோ குடும்பத்துடன் கல்யாணத்துக்கு போயிருந்தாலோ ஆவலுடன், "கேமராவை எடுத்துட்டு போகலாமா?" என்று கேட்பார். "ஆனால் அங்கெல்லாம் நாம் விருந்தினர்கள், நீ அங்கு புகைப்படம் எடுக்க முடியாது!" என்று அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது. 
 
ஷைஷவ் மற்றும் அவரது நண்பர்கள் பரத் குமார் (47), தரித் கன்னா (32) மற்றும் விகாஸ் கபாஹி (48) ஆகியோர் யுனிக் ஐ போட்டோகிராபியின் (Unique Eye Photography) முக்கிய மையமாக விளங்குகிறார்கள். இது 2014 ஆம் ஆண்டில் அவர்களின் பெற்றோரால் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமான முயற்சியாகும். "கடந்த ஆண்டு நாங்கள் அதை பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கினோம்," என்கிறார் யுனிக் ஐ மேலாளர் ஷ்ரேயா. ஷைஷவ் மற்றும் தாரித் ஆகியோருக்கு டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) உள்ளது, பாரத் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் (autism spectrum ) உள்ளார். மற்றும் விகாஸுக்கு ஒரு குறிப்பிட்ட கற்றல் குறைபாடு (specific learning disability) உள்ளது. அவர்களின் பெற்றோர் ஒரு தொழிற்கல்வி மையத்தில் சந்தித்தனர், அங்கு அவர்களின் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பொதுவான திறன்களைக் கற்றுக் கொண்டிருந்தனர். "ஆடுதல் செய்வது (baking), மண்பாண்டம் செய்வது, தீபம் தயாரிப்பது ஆகியவற்றைத் தாண்டி நம் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்க முடியாதா?" என்று அவர்கள் யோசித்தனர்.
 
இந்த கட்டத்தில், மோஹித் அஹுஜா (knowdisability.org ) என்ற "அன்பான மனிதரை" அவர்கள் சந்தித்தனர் என்று ஸ்ரேயா கூறுகிறார். இளைஞர்களுக்கு புகைப்படக் கலையில் பயிற்சி அளிக்கவும், தனது ஸ்டுடியோவைப் பயன்படுத்திக் கொள்ளவும் அவர் முன்வந்தார். புகைப்பட கலையில் கம்போசிஷன், எடிட்டிங் (composition and editing) எல்லாம் கற்றுக் கொள்ள தொடங்கினர். ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கியது படிப்படியாக ஒரு பேரார்வமாக மாறியது, இப்போது, நடைமுறையில் ஒரு தொழிலாகவே மாறியது. 2020 ஆம் ஆண்டில் கோவிட் நாட்டைத் தாக்கியபோது அவர்களின் வேகத்தைக் குறைத்தன, ஆனால் நெருக்கடி முடிந்தவுடன் அவை மீண்டும் வேகம் பிடித்தன. அவர்களுக்கு தற்போது புதுதில்லி சக்தி நகரில் உள்ள குழந்தைகள் மேம்பாட்டு சங்கத்தில் சித்தார்த் பூரி வழிகாட்டியாக உள்ளார்.
 
நால்வரில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் நிபுணத்துவம் பெற்ற பிரத்யேகமான பகுதிகள் உள்ளன. விகாஸ் தயாரிப்பு புகைப்படம் எடுத்தல் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்குவதில் ஆர்வமாக உள்ளார்; பரத் மற்றும் சைஷவன், உருவப்படங்கள் மற்றும் தயாரிப்புகளில்; மற்றும் இயற்கை மற்றும் வனவிலங்குகளில் (குறிப்பாக விலங்குகள்) தரித். தேவையான திறன்களை அவர்கள் பெற்றவுடன், பெற்றோர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டனர், "அடுத்தது என்ன?" குடும்பம் மற்றும் நண்பர்களின் மூலம் இளைஞர்கள் பணிகளைப் பெறத் தொடங்கினர், பின்னர், கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து இலாபகரமான வேலைகளை பெறத் தொடங்கினர்.
 
பல ஆண்டுகளாக, Unique Eye ஆனது Panasonic, Harley Davidson மற்றும் BNI போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைத்துள்ளது. கடந்த ஆண்டு கோவாவில் நடந்த நிப்பான் பெயிண்ட் மாநாட்டை
இவர்கள் புகைப்படம் எடுத்தார்கள்.அவர்கள் டெல்லி என்.சி.ஆரில் பல சிறப்பு ஒலிம்பிக் பாரத் நிகழ்வுகளை எடுத்தார்கள். மிக சமீபத்தியது ஆறு நாள் பந்துவீச்சு நிகழ்வு. அவர்களின் படைப்புகள் கலை நிகழ்வுகள் மற்றும் காட்சியகங்களிலும் அதன் இடத்தைக் கண்டறிந்துள்ளன; அவற்றில் ஒன்று சமீபத்தில் இங்கிலாந்தின் டவுன் சிண்ட்ரோம் அசோசியேஷனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. யுனிக் ஐ அவர்களின் புகைப்படங்களை eCAPA போன்ற கண்காட்சிகளில் காட்சிப்படுத்துகிறது - The Art Sanctuary,நடத்தும் வருடாந்திர கண்காட்சி, நரம்பியல்-மாறுபட்ட கலைஞர்களின் கலைப்படைப்புகள்.
 
பெரும்பாலும் 12 மணிநேர வேலை நாட்களை உள்ளடக்கிய பணிகளில் பணிபுரிவது அவர்களின் சகிப்புத்தன்மையை வளர்க்க உதவுகிறது மற்றும் அவர்களுக்கு மிகவும் தேவையான பழக்கத்தையும் ஊக்க உணர்வையும் கொடுக்கிறது என்று ஸ்ரேயா கூறுகிறார். ஷைஷவும், தாரித்தும் பல Down Syndrome ஆட்களைப் போல அன்புள்ளவர்களாக இருப்பதால், இந்த நிகழ்வுகளில் மக்களை அழைத்து, வாருங்கள், உங்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அரை கூவல் விடுகிறார்கள்.
 
"இது ஒரு 'பரிதாபமான' விஷயமாக இருக்க நாங்கள் விரும்பவில்லை, தொண்டு வேலை" என்கிறார் ஸ்ரேயா. நான்கு இளைஞர்களுக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது மற்றும் வாடிக்கையாளர்களின் கட்டணத்தில் நியாயமான பங்கைப் பெறுகிறார்கள். உண்மையில், ஒரு நியமனம் அல்லது பணி வரும்போது, "எங்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?" என்று இப்போது கேட்கிறார்கள். அது சரிதான், ஏனெனில் இந்த முயற்சி அவர்களின் நிதி சுதந்திரத்திற்கு வழி வகுக்கும், எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்! 

புகைப்படங்கள்:

விக்கி ராய்