ஒரு தாயின் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றலினால் தன் இளைய மகன் muscular dystrophyஎன்னும் உபாதையால் பாதிக்கப் பட்டு இருக்கிறான் என்பதை கண்டறிய முடிந்தது. இது மரபியலில் வரும் நோய். இதனால் நாட்கள் ஆக ஆக சதைகள் வலுவிழந்து, உடல் பலவீனம் அடையும். தற்போது 37 வயதாகும் சுனில் குமார் MJ பெங்களூரிலேயே பிறந்து பள்ளி நாட்களில் அங்கேயே வாழ்ந்தவர். இளம் வயதிலே, வயதில் மூத்த உடன் பிறந்தவர்களான ரத்நா மேரி, அநில் குமார் போன்றவர்களை போலவே ஓடி விளையாடிக் கொண்டிருப்பார். 16 வயதான போது பேருந்து படிகளில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்தார். மீண்டும் எழுந்திருக்கும் விதம் வித்தியாசமாக இருப்பதை அவர் தாய் ஜெயம்மா உணர்ந்தார். இரண்டு ஆண்டுகளாகவே தன் மகன் கீழே விழுந்து உடைகள் கிழிவதை கவனித்திருந்தார். பேருந்திலிருந்து விழுவதை பார்த்ததும் ஏதோ சரி இல்லை என்ற சந்தேகம் வலுத்தது.
ஜெயம்மாவும், அவர் கணவரும், சுனிலை நாகரபாவி ஊரில் இருக்கும் பத்மஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து மேலும் பல வித சோதனைகளையும் செய்து "இன்னும் ஆறே மாதத்தில் உங்கள் குழந்தைக்கு நடக்க முடியாமல் போய் விடும்" என்று குண்டு போட்டு அறிவித்தனர். "என் பெற்றோர்கள் மனமொடிந்து போனார்கள். ஆனால் எனக்கு எல்லாம் செய்ய வந்ததால் கவலை படவே இல்லை." என்று நினைவு கூர்ந்தார்.
விரைவில், நோயின் தாக்கம் கடுமையாக தொடங்கியது. பள்ளி படிப்பு முடிந்தவுடன் பன்னர்கட்டா சாலையில் உள்ள Loyola Industrial Training Institute என்ற கல்லூரியில் 2 வருட படிப்பிற்கு சேர்ந்தார். ஒரு கையில் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மாடி ஏறுவதற்கு மிகவும் கஷ்டப் பட்டார். படிப்பு முடிய 6 மாதம் இருக்கும்போது கடும் ஜுரம் தாக்கி வீட்டிற்கு திரும்ப வர வேண்டிய நிலைமை. இம்மாதிரி உடல் நிலையில் மீண்டும் கல்லூரிக்கெல்லாம் செல்ல வேண்டாம் என்று தந்தை பரிந்துரைத்தார். மரியாப்பா ஒரு வீட்டு விற்பனை தரகர். அவர் குடும்பம் முதல் மாடியில் வசித்து வந்தனர். கட்டடத்தின் கீழ் நிலையில் ஒரு முடி திருத்த கடை வாடகைக்கு குடி இருந்தனர். மரியாப்பா தன் கட்டடத்தில் இரண்டாம் மாடி கட்டவும், அந்த பொறுப்பை சுனிலிடம் ஒப்படைக்கவும் தீர்மானித்தார். அதற்கு தவிர, சுனில் கணினிகளை வெகு நேரம் பயன் படுத்தி, அதில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து, சுனிலுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்தார்.
தன்னுடைய ஆர்வத்தில் Word and Excel போன்ற செயலிகளை சுனில் கற்றுக் கொண்டார். கணினியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்ட்டால் அது என்ன என்று நன்கு ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடிக்க தன் தந்தையின் உந்துதலால் கற்றறிந்தார். இந்தத் துறைகளில், 18 மாதங்களிலேயே சுனில் மிகுந்த தேர்ச்சி அடைந்தார். தேவாலயத்திற்கு சேர்ந்து வரும் செபாஸ்டியன் என்பவற்றின் பரிந்துரைப்பில் ராஜாஜி நகரில் உள்ள Vindhya E-Infomedia நிறுவனத்தை பற்றியும், அந்நிறுவனம் ஊனமுற்றோர்கள் பலரை பணியில் அமர்த்தி உள்ளதாகவும் சொல்லி, அங்கே நேர்காணலுக்கு பரிந்துரைத்தார். நேர்காணலில் வெற்றி பெற்று, பணியில் சேர்ந்தார்.
2009 முதல் இன்று வரை இந்நிறுவனத்திலேயே பணி புரிந்து வருகிறார்.பெரிய ஆசையோ குறிக்கோளோ ஒன்றும் முதலில் இல்லை. "என் தந்தை என்னை அலுவலகத்தில் கொண்டு போய் விடுவார். முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்து செல்வார். எனக்கு என்ன வேலை கொடுக்கிறார்களோ, அதை செவ்வனே செய்து முடிப்பேன்" என்று கூறினார். ஆனால், மேலும் மேலும் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளர், தரம் மற்றும் பயிற்சி அளித்தல் என்ற பதவியுடன், இரட்டிப்பு சம்பளம் கிடைத்தவுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு பெருகியது. பற்பல விருதுகளையும், பரிசுகளையும் இந்நிறுவனத்தில் பெற்ற இவர், Overall Champion for Best Performance, என்ற விருதையும், ரோட்டரி கிளப் அளிக்கும் “Unsung Heroes” என்ற விருதையும் பெற்றார்.
உண்மையாகவே பல வகைகளில் சுனில் ஒரு Heroதான்! 2011ம் ஆண்டு மனத் தளர்ச்சியை முறியடித்து, மன உறுதியுடன் வாழ்க்கையில் முன்னேறினார். தன் வாழ்க்கை பாதையை நினைவு கூர்ந்தார்: "நான் காதல் திருமணம் புரிந்து கொண்டேன். சந்தித்து 28 நாட்களிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். ஊனமுற்ற ஒருவனை திருமணம் செய்து கொள்ள அவள் பெற்றோர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை. அதனால் நான் அவளை கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் செய்தனர். காவல் நிலையத்தில் என் மனைவி 'நான் என் சொந்த விருப்பதினால்தான் இந்த திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளேன்' என்று சொல்லவே அந்த புகார் தள்ளுபடி ஆயிற்று" என்று கூறினார்.
ஆனால் பெற்றோர்கள் இத்தோடு விட வில்லை. என் மனைவியிடம் தாய்க்கு உடம்பு சரியில்லை, அதனால் பத்தே நாட்கள் மட்டும் வந்து இருக்க வேண்டிக் கேட்டுக் கொண்டனர். 10 நாட்கள் என்பது வாரக்கணக்கில் ஆனது. தன் மகளை வற்புறுத்தி விவாக ரத்து மனு போட வைத்தனர். மனம் உடைந்து போன சுனில் ஆறு மாதங்களுக்கு சரியாக சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. ஆனால் சுனிலின் பெற்றோர்கள் "அவளுக்கு குடும்பம் இருக்கிறது. நாங்கள் உன் கண் முன்னே இருக்கிறோம். நாங்கள் உன் கண்ணில் பட வில்லையா?" என்று கேட்டவுடன், சுனில் விழித்து எழுந்தார்.
ஆனால் அதெல்லாம் கடந்த காலம்! இப்போது மற்றவர்கள் சோகத்துடன் இருந்தால் அவர்களுக்கு உதவிக்கு கரம் நீட்டி அவர்களை சமாதானம் செயகிறார். அவர் சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்: "ஊனமுற்றோர்களுக்கு எது சாத்தியம் என்பதில் கவனம் செலுத்துங்கள். சரியான காலத்தில் அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை அளியுங்கள். அப்போதுதான் அவர்கள் நன்கு முன்னேற முடியும்."