பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு சம்பரன் பகுதியைச் சேர்ந்த ராம்ஜி குமார் (11) என்பவரால் சில வார்த்தைகள் மட்டுமே பேச முடியும், ஆனால் மற்ற குழந்தைகளைப் போலவே அவரும் விளையாட்டுப் பொருட்களால் சூழப்பட்டிருக்கும்போது மகிழ்ச்சியில் திளைக்கிறார். புகைப்படக் கலைஞர் விக்கி ராய் சேஷ்தா வில் அவரது பெற்றோரால் ஒருபோதும் வாங்க முடியாத வண்ணமயமான பந்துகள் மற்றும் கட்டுமானத் தொகுதிகளை (building blocks) வைத்துக் கொண்டு கையாள்வதைப் படம் பிடித்தார்.
நல்லிணக்கம், கல்வி, சமூக நடவடிக்கை, சுகாதாரம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கான மையத்தின் சுருக்கமான சேஷ்தா ( Centre for Harmony, Education, Social action, Health and Training Activities), "இந்திய -நேபாள எல்லையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்" ரக்சவுலில் அமைந்துள்ளது என்று அதன் இயக்குனர் கிரேசி கோடியன் ஓசெப் கூறுகிறார். ஒரு சிறிய தன்னார்வ தொண்டு நிறுவனமாக இருந்தபோதிலும், ராம்ஜி போன்ற பெருமூளை வாதம் (சிபி) (Cerebral Palsy (CP)) அல்லது அறிவுசார் குறைபாடு (Intellectual Disability (ID)) அல்லது பிற உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள 300 குறைபாடுகள் உள்ள குழந்தைகளை சேஷ்தா நிர்வகிக்கிறது.
பகல்நேர பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து வழங்குவதைத் தவிர, சேஷ்தா ஊழியர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத குழந்தைகளை சந்தித்து, குழந்தைகளுக்கு பிசியோதெரபி (physiotherapy ) மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் வீட்டு பராமரிப்பையும் வழங்குகிறார்கள். "பெரும்பாலான பெற்றோர்கள் ஏழ்மையில் உள்ளனர், கட்டைவிரல் ரேகையை மட்டுமே கைநாட்டாக வைக்க மட்டுமே முடியும்" என்று சகோதரி கிரேஸ் கூறுகிறார். ராம்ஜியின் பெற்றோர்களான கனஹியா பிரஷத் (31) மற்றும் ஷரிதா தேவி (28) ஆகியோர் கல்வியறிவு மற்றும் முறையான கல்வியை பெறாதவர்களாக உள்ளனர். தினக்கூலியான ₹ 100 க்கு மாதத்திற்கு 10 முதல் 15 நாட்கள் வரை மற்றவர்களின் வயல்களில் வேலை செய்வதாக கனஹியா கூறுகிறார், அது தனக்கும், தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுக்கும் உணவளிக்க போதுமானதாக இல்லை. ராம்ஜியின் மாற்றுத்திறனாளி சான்றிதழ் அவருக்கு மாதத்திற்கு ₹ 400 அரசாங்க ஓய்வூதியத்திற்கு உரிமை அளிக்கிறது.
ராம்ஜியின் தீவிரமான சிபி CP அறிகுறிகள் அவரை ஒரு வருடம் படுக்கையில் முடக்கின. தற்போது அவரால் நடக்க முடிகிறது, மேலும் அவரது கடுமையான பேச்சுக் குறைபாடு ஓரளவு மேம்பட்டுள்ளது என்று சகோதரி கிரேஸ் எங்களிடம் தெரிவித்தார். பன்னிரண்டரை வயதாகும் தனது மூத்த மகன் சிவகுமாரும் பேச்சு மற்றும் புரிந்துகொள்ளும் திறனில் சவால்களை எதிர்கொள்கிறார் என்று கனஹியா கூறுகிறார், இருப்பினும் சிவகுமார் ஆறாம் வகுப்புடன் ஒரு அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். மாற்றுத்திறனாளி இல்லாத அவரது தம்பி பரத்குமாரும் அதே அரசுப் பள்ளியில்தான் படிக்கிறார். பள்ளி வாத்தியார் ராம்ஜியையும் சேர்த்துவிட்டதாகவும், ஆனால் "கட்டாயப்படுத்தினால் அழுவார்" என்றும் கனஹியா கூறுகிறார் – அவர் அங்கு வருகைப் பதிவில் பதிவு செய்வதை தவிர (mark attendance) வேறு என்ன செய்வார்? சாப்பிடுவது, குளிப்பது போன்ற அன்றாட தேவைகளை கவனித்துக்கொள்ள அவரது தாய் அவருக்கு உதவுகிறார். வழக்கமான அரிசி மற்றும் பருப்பு தவிர, ராம்ஜி பிஸ்கட்டுகளை விரும்புகிறார் என்று கனஹியா கூறுகிறார். பக்கத்து வீட்டுக்கு டிவி பார்க்க செல்கிறான் கூறினார்.
இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவ விரும்புவதாக சகோதரி கிரேஸ் கூறுகிறார். சேஷ்தாவில் சில நன்கொடையாளர்கள் உள்ளனர், மேலும் மிகவும் பின்தங்கியவர்களுக்கு முடிந்ததைச் செய்கிறார்.