Icon to view photos in full screen

"நான் 'மகாதேவ்' படத்தை டிவியில் பார்க்கிறேன், என் அம்மா எனக்கு உரக்க வாசிக்கும் கதைகளைக் கேட்க விரும்புகிறேன்"

பெருமூளை வாதம் (சிபி CP) கொண்ட தியா ஸ்ரீயின் (17) தாயான மினியிடம் நாங்கள் பேசியபோது, அவர்கள் கேரளாவில் இருந்தனர், அங்கு தியா தனது உடல் அசைவுகளை மேம்படுத்த உதவும் வகையில் 20 நாள் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டார். போர்ட் பிளேயரில் இந்தி ஆசிரியையாக இருக்கும் மினி, ஒரு பள்ளியில் பணிபுரிகிறார், அந்த பள்ளி அவரது சிரமங்களைப் புரிந்துகொள்கிறது, மேலும் தியாவின் உடல்நலப் பிரச்சினைகள் எழும்போதெல்லாம் விடுப்பு எடுக்க அனுமதிக்கிறது.
 
மினி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விதவையானார். வனத்துறையில் காட்டிலாகா அதிகாரி ரேஞ்சராக (ranger) இருந்த அவரது கணவர் டி.ராஜேஷ்குமார் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தார். அவர் ஒரு வேலைக்குச் செல்லும் பெண் என்பதால், தியாவின் அன்றாட தேவைகளான பல் துலக்குதல், உடை உடுத்துதல், குளித்தல் மற்றும் உணவளித்தல் ஆகியவற்றைக் கவனிக்க ஒரு பணிப்பெண்ணை நியமித்துள்ளார். அவரது மகன் மணீஷ் (24) வீட்டு வேலைகளில் உதவுகிறார்.
 
ஆன்லைன் எம்.பி.ஏ படிக்கும் மணீஷ், வளர்ந்து வரும் போது, தனது தாய் தனது பெரும்பாலான கவனத்தை தனது சகோதரிக்கு அர்ப்பணிப்பார் என்பதை புரிந்துகொண்டதாக எங்களிடம் கூறினார். வயது ஏற ஏற அவள் ஒதுங்கிப் போனாள். அவர் தனது நிலை குறித்து எரிச்சலடையத் தொடங்கினார், இது உடன்பிறப்பு உறவில் விரிசல்களுக்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக வெளியே சென்றார்களா என்று கேட்டபோது, "எங்களுக்கு மிகக் குறைந்த குடும்ப நேரம் கிடைக்கிறது," என்று மினி கூறினார். "தியா தனது கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களுடனும், எங்கும் அணுகல் இல்லாமலும் வெளியில் அழைத்துச் செல்வது கடினம்."
 
தியா பிறந்த நேரத்தை நினைவு கூர்ந்த மினி, தான் கர்ப்பமாக இருந்தபோது சிக்குன்குனியாவைப் பிடித்ததாகக் கூறினார். அவரது இரத்த அழுத்தம் அதிகரித்தது மற்றும் அவசர அறுவை சிகிச்சை சிசேரியன் பிரிவின் மூலம் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, தியாவின் மூளைக்கு சில நிரந்தர சேதங்கள் இருப்பதை அவர் பின்னர் கண்டுபிடித்தார். ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது, கேரள மருத்துவமனை மருத்துவர்கள், அசாதாரணமான ஒன்றைக் கவனித்தனர். சி.டி ஸ்கேன் (CT scan) செய்த பிறகு, அவர்கள் அவளுக்கு சிபி (CP) இருப்பதைக் கண்டறிந்தனர். தியா ஆறு மாதங்களுக்கு பிசியோதெரபி மேற்கொண்டார், ஆனால் குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட வருமானம் அவர்களை மேலும் தொடர அனுமதிக்கவில்லை.
 
தியா பள்ளி செல்லும் வயதை எட்டிய போது , குடும்பத்தினர் அவளை அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்தனர். மினி தனது சொந்த கற்பித்தல் அட்டவணையைக் கொண்டிருந்ததால் அவர்களின் பணிப்பெண் அவளுடன் வருவார். எல்லோருக்கும் பொதுவான (Mainstream ) பள்ளிக் கல்வி தியா பொருந்தவில்லை, கோவிட் தொற்றுநோய் பூட்டுதலைக் கட்டாயப்படுத்தும் வரை அவர் ஒரு சிறப்புப் பள்ளிக்குச் சென்றார். அதன்பிறகு அவர் பள்ளிக்கு செல்லவில்லை, இப்போது பத்தாம் வகுப்பு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வார இறுதி நாட்களில் வீட்டிற்கு வந்து அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். "அவளுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது, அவள் விஷயங்களைக் கேட்கும்போது அவற்றை நன்றாகப் புரிந்துகொள்கிறாள்" என்று மினி கூறுகிறார்.
 
தியா தனது தாய் தனக்கு வாசித்துக் காட்டும் கதைகளைக் கேட்பதை விரும்புகிறார். சிவபெருமானை நேசிப்பதால் டிவி பார்ப்பதிலும், குறிப்பாக 'மகாதேவ்' சீரியல் பார்ப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். தனக்கு உணவுக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவற்றைப் பின்பற்றுவது கடினம் என்று மினி கூறுகிறார், தவிர, தியா வழக்கமான உணவை விரும்புகிறார். "அவள் ஒரு உணர்ச்சிகரமான நபர், ஆனால் மனதளவில் வலிமையானவர்" என்று மினி கூறுகிறார். "அவள் தனது சொந்த தேவைகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். யாராவது ஒரு மருத்துவரையோ அல்லது பயனுள்ள சிகிச்சையையோ பரிந்துரைக்கும்போதெல்லாம் நான் அவளை அழைத்துச் செல்கிறேன். சமீபத்திய ஆயுர்வேத சிகிச்சை அத்தகைய ஒரு ஆலோசனையின் விளைவாக இருக்கலாம்.
 
குடும்பத்திற்கு மாதாந்திர இயலாமை கொடுப்பனவு மானியம் ₹ 2,500 கிடைக்கிறது. மற்றும் மினியின் சகோதரரிடமிருந்து சற்று பண உதவியம் கிடைக்கிறது.


புகைப்படங்கள்:

விக்கி ராய்